உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அக். 31, நவ. 12ல் ஒற்றுமை அணிவகுப்பு

அக். 31, நவ. 12ல் ஒற்றுமை அணிவகுப்பு

விருதுநகர்: சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு மேரா யுவ பாரத் சார்பில் ஒற்றுமை அணிவகுப்பு ராஜபாளையம், விருதுநகரில் நடக்கிறது என மேரா யுவ பாரத் மாவட்ட இளைஞர் நல அலுவலர் ஞானச் சந்திரன் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கட்டுரை, வினாடி வினா, ரீல்ஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மேலும் ஒற்றுமையை வலியுறுத்தி ஊர்வலங்களும், பாத யாத்திரைகளும், அணிவகுப்புகளும் நடக்கின்றன. இளைஞர்களிடையே ஒற்றுமை, தேசபக்தியின் உணர்வை எழுப்புவதே இந்த பிரசாரத்தின் நோக்கம். மாவட்டத்தில் அக். 31 ராஜபாளையம், நவ. 12விருதுநகரில் ஒற்றுமை அணிவகுப்பு ஊர்வலம் நடக்கிறது. இந்த இரண்டு ஊர்வலங்களிலும் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மக்கள் கலந்து கொள்ள வேண்டும், என்றார். மாவட்ட விளையாட்டு நல அலுவலர் குமரமணிமாறன் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ