மேலும் செய்திகள்
கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச மாநாடு
23-Feb-2025
ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் பல்கலை தின விழா நடந்தது.வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். இணை வேந்தர் டாக்டர் அறிவழகி, துணைத்தலைவர் சசி ஆனந்த் முன்னிலை வகித்தனர். துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் பல்கலை வளர்ச்சி குறித்து பேசினர். பேராசிரியர் சாம்சன் நேசராஜ் வரவேற்றார்.விழாவில் கற்பித்தல் திறனுக்காக 63 பேராசிரியர்கள், ஆராய்ச்சி திறனுக்காக 213 பேராசிரியர்களுக்கு ரொக்க பரிசு, சான்றிதழ்களை வேந்தர் ஸ்ரீதரன் வழங்கினார். 40 மாணவர்களுக்கான ஆராய்ச்சி திறனக்கான விருதுகளை இணை வேந்தர் டாக்டர் அறிவழகி வழங்கினார். சிறந்த மாணவன் விருதை வசீகரனுக்கும், சிறந்த மாணவி விருதை அன்னி மாக்டலினுக்கும் துணைத் தலைவர் சசி ஆனந்த் வழங்கினார். ஆராய்ச்சி துறை இயக்குனர் பள்ளிகொண்ட ராஜசேகரன் நன்றி கூறினார்.
23-Feb-2025