உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பல்கலை பட்டமளிப்பு விழா

பல்கலை பட்டமளிப்பு விழா

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை 37 வது பட்டமளிப்பு விழா நடந்தது.வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். இணை வேந்தர் டாக்டர் அறிவழகி, துணைத்தலைவர் சசி ஆனந்த், துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், போர்டு ஆப் மேனேஜ்மென்ட் நிர்வாக உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். 2 ஆயிரத்து 145 பேருக்கு எச்.பி. இ.கம்பெனி சர்வதேச இயக்குனர் கிரிராஜன் மெஞ்ஞானம், துபாய் சிராஜ் கம்பெனி நிர்வாக இயக்குனர் காதிர் பீர் செரீப் பட்டங்களை வழங்கி பேசினர்.விழாவில் பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை