மேலும் செய்திகள்
தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்
1 minutes ago
போலீஸ் செய்தி
3 minutes ago
ஜெ., நினைவு நாள் அனுசரிப்பு
5 minutes ago
குழாய் உடைந்து வீணாகுது குடிநீர்
5 minutes ago
மாநில கலைத் திருவிழா மாணவிக்கு முதல் பரிசு
6 minutes ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முகாமில் எஸ்.ஐ.ஆர். படிவங்கள் பதிவேற்றும் பணி 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 2 ,43,752 ஓட்டுக்களில் இறப்பு, வாக்காளர்களை கண்டறிய முடியாத நிலை, நிரந்தர இடமாற்றம் உட்பட பல்வேறு காரணங் களால் 31, 473 ஓட்டுகள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதியில் தாசில்தார் பாலமுருகன், தேர்தல் பிரிவு அலுவலர் சசிகலா தலைமையில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 752 பேருக்கு எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கினர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் வத்திராயிருப்பு ஒன்றியத்தில் 99 ,631, ஸ்ரீவில்லிபுத்துார் ஒன்றியத்தில் 80, 693, நகராட்சியில் 64, 228, என 100 சதவீத வாக்காளர்களின் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் இறப்பின் காரணமாக 11, 890, கண்டறிய முடியாத நிலை 946, நிரந்தர இடம் மாற்றம் 16,210, ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட 1883, இதர வகை 44 என மொத்தம் 31 ஆயிரத்து 473 வாக்காளர்களின் ஓட்டுரிமை குறையும் நிலை ஏற் பட்டுள்ளது.
1 minutes ago
3 minutes ago
5 minutes ago
5 minutes ago
6 minutes ago