உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துார் கிராமங்களில் மின் திருட்டு நடப்பதை தடுக்க வலியுறுத்தல்

சாத்துார் கிராமங்களில் மின் திருட்டு நடப்பதை தடுக்க வலியுறுத்தல்

சாத்துார்: சாத்துார் சுற்று கிராமங்களில் பொங்கல் விழாவை முன்னிட்டு மின் திருட்டு நடப்பதை தடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.சாத்துார், சுற்றுக் கிராமங்களில் தற்போது சித்திரை மாதத்தை முன்னிட்டு காளியம்மன், பத்ரகாளியம்மன், மாரியம்மன், பேச்சியம்மன் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளுக்கு பொங்கல் வைபவம் நடைபெற்று வருகிறது.இந்நேரங்களில் உயரழுத்த மின் கம்பிகளில் அனுமதியின்றி வயர்களை கொக்கி மூலம் பொருத்தி மின்சாரம் எடுப்பது வழக்கம். விபத்துக்கள் ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து உயிர்கள் பலியாகும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகிறது.இவ்வாறு திருட்டுத்தனமாக மின்சாரம் எடுக்கும் போது அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.திருவிழா போன்ற தருணங்களில் விழா ஏற்பாட்டாளர்கள் முறைப்படி மின் வாரியத் துறையினரை அணுகி தங்களுக்கு தேவையான மின்சாரத்தை முறைப்படி பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.அல்லது ஜெனரேட்டர் போன்ற வசதிகளை ஏற்படுத்தி திருவிழா சமயங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதை விடுத்து உயர் அழுத்த கம்பிகள் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுக்கும் போது மின்துறையில் நஷ்டம் ஏற்படுவதோடு விபத்து அபாயமும் ஏற்படுகிறது. எனவே திருவிழா சமயங்களில் மின்திருட்டு ஏற்படுவதை தடுக்க மின்சார வாரிய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை