மருத்துவத்துறையில் காலிப்பணியிடங்கள்
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை, நலவாழ்வு சங்கத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆயுஷ் மருத்துவ ஆலோசகர் 3, ஹோமியோபதி மருத்துவர் 1, பல்நோக்கு பணியாளர்கள் 4, சிகிச்சை உதவியாளர் 4, ஆகிய பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் http://virudhunagar.nic.inஎன்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவ.14 மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார நல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் - 626 001 என்ற முகவரிக்கு நேரிலோ, விரைவு தபால் மூலமாகவோ சமர்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.