உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காலியாகும் அரசு அலுவலக கட்டடங்கள்

காலியாகும் அரசு அலுவலக கட்டடங்கள்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படும் நிலையில், காலியாகும் அந்த கட்டடங்களை சொந்த இடமில்லாமல் தவிக்கும் வட்டார கல்வி அலுவலகம், அங்கன்வாடி துறையினருக்கு ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகாவில் வட்டார கல்வி அலுவலர்களுக்கான அலுவலகம் திருமுக்குளம் நகராட்சி பயணியர் விடுதி கட்டிடத்தின் ஒரு பகுதியில் வாடகை கட்டணத்தில் இயங்கி வந்தது. அலுவலகத்திற்கு என சொந்த இடம் கிடைக்காததால் தற்போது கிருஷ்ணன் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து அவர்களை வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேபோல் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு என மடவார் வளாகத்தில் ஒரு அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது அந்த இடத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்படுகிறது. இதனால் அவர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.இதேபோல் அரசு நூலகத்திற்கு என சொந்த இடம் கிடைக்காமல் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. தங்களுக்கு இடம் ஒதுக்கி தருமாறு நகராட்சி நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக நூலக துறையினர் கோரிக்கை விடுத்தும் இதுவரை இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் காலியாகும் ஊராட்சி ஒன்றிய தற்போதைய அலுவலக கட்டிடத்தை வட்டார கல்வி துறை அலுவலகத்திற்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கும் மாற்றித் தர வேண்டும்.இதுபோல் காலியாகும் தாசில்தார் அலுவலக கட்டடத்தை அரசு நூலகத்திற்கு மாற்றம் செய்து தர வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ