மேலும் செய்திகள்
டூவீலர் விபத்தில் பலி
15-Sep-2025
ராஜபாளையம்; ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகே நடந்த சாலை விபத்தில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார். உடன் வந்த சிறுவன் முதியவர் உட்பட 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெறுகின்றனர். ராஜபாளையம் அருகே தேவதானத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஐயப்பன் 44, சேத்துார் மேட்டுப்பட்டியை சேர்ந்த மணிவாசகம் 62, அவரது மனைவி தொந்தியம்மாள் 43, மகாவீர் மெய்யர் 14, ஆகியோர் ராஜபாளையத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சிகிச்சைக்கு பின் 4 பேரும் ஆட்டோவில் ஊர் திரும்பும் போது அரசு மருத்துவமனை அருகே எதிரே தளவாய்புரத்திலிருந்து அரிசி மூடை ஏற்றி வந்த மினி வேன் மீது நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ முன்புறம் நசுங்கியது. வேன் தலை குப்புற கவிழ்ந்தது. ஆட்டோ டிரைவர் ஐயப்பன் உடல் நசுங்கி உயிர் இழந்தார். ஆட்டோவில் வந்த மூவர், வேன் டிரைவர் சேத்துாரை சேர்ந்த மாரிமுத்து மதுரை, நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Sep-2025