வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: விருதுநகர் இ.குமாரலிங்கபுரம் கண்மாய் கனிமவளக் கொள்ளையில் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், வி.ஏ.ஓ., அஜீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகர் தாசில்தார் அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக வட்ட தலைவர் முனியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் வட்ட பொருளாளர் செல்வி, துணை தலைவர் கதிரேசன், துணை செயலாளர் சுப்புலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.