மேலும் செய்திகள்
முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
11-Oct-2025
ராஜபாளையம்: ராஜபாளையம் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கந்த சஷ்டி வேல் பூஜை நடந்தது. விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வட,தென் தமிழகம் நடத்தும் வேல் பூஜை காமாட்சி அம்மன் கோயில் தெரு தனியார் மண்டபத்தில் நடந்தது. ஊர் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். ராம அப்ரமேய ராமானுஜ ஜீயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். வி.எச்.பி மாவட்ட செயலாளர் ஆனந்த், சமுதாய செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். திரளான பெண்கள் உட்பட பக்தர்கள் கந்த சஷ்டி வேலுக்கு அபிஷேகம் செய்தனர். சிறப்பு வழிபாடு நடந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
11-Oct-2025