மேலும் செய்திகள்
பிரதிஷ்டைக்காக விநாயகர் சிலைகள் பயணம்
23-Aug-2025
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் கோயில்களில் சதுர்த்தி பூஜை வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியின் அருள் பெற்றனர். விநாயகர் சதுர்த்தி நாளான நேற்று மாவட்டத்தில் வீடுகள் தோறும் மக்கள் கொழுக்கட்டை, மோதகம் படைத்து விநாயகரை வழிபட்டனர். மேலும் பல்வேறு அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்தும், கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழி பட்டனர். விருதுநகரில் வால சுப்பிரமணிய சுவாமி கோயில் விநாயகர் சன்னதி, பராசக்தி மாரியம்மன் கோயில், வெயிலுகந்தம்மன் கோயில், மீனாட்சி சொக்கநாதர் கோயில் விநாயகர் சன்னதிகள், சிவகணேசன் கோயில், வழிவிடு விநாயகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கியது. மேலும் காலை, மாலை அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. * அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் தெப்பத்திற்கு அருகில் உள்ள படித்துறை விநாயகர் கோயிலில் விநாயகருக்கு அலங்காரம் பூஜைகள் நடந்தது. தாதன்குளம் விநாயகர் கோயில், எஸ்.பி. கே., பள்ளி ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோயில், மதுரை ரோட்டில் உள்ள ஆதி பாலச்சந்திரன் விநாயகர், வடுகர் கோட்டையில் உள்ள விநாயகர், ஆனந்த விநாயகர், தெற்குதெருவில் உள்ள செல்வ விநாயகர், பத்ரகாளியம்மன் கோயில் உள்ள சக்தி விநாயகர், எஸ்.பி.கே., இண்டர் நேஷனல் பள்ளியில் உள்ள மாணிக்க விநாயகர், அமுத லிங்கேஸ்வரர் கோயில் விநாயகர் உள்ளிட்ட கோயில்களில் பூஜைகள் அலங்காரங்கள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
23-Aug-2025