உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலி ஆவணம் மூலம் இடம் விற்பனை

போலி ஆவணம் மூலம் இடம் விற்பனை

விருதுநகர் : ராஜபாளையம் புத்தூரில் அண்ணன் இடத்தை போலி ஆவணம் தயாரித்து விற்ற தம்பி உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிய செய்ய போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ராஜபாளையம், புத்தூர் நாடார் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு சொந்தமாக இரண்டு கிணறுடன் கூடிய 3 ஏக்கர் 99 சென்ட் நிலத்தை, இவரது தம்பி பஞ்சாங்கம் என்பவர், போலி ஆவணம் தயாரித்து, அதே ஊரை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு விற்பனை செய்தார். இதற்கு காசிவேல், அவரது மகன் பஞ்சாங்கம், கடல்மணி ஆகியோர் சாட்சி கையெழுத்திட்டுள்ளனர்.இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க, விருதுநகர் ஜே.எம். 2 கோர்ட்டில் மாரிமுத்து மனு செய்தார். இதை விசாரித்த மாஜிஸ்திரேட் சசிரேகா,இது தொடர்பாக சம்பந்தபட்டவர்கள் மீது வழக்கு பதிய போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட குற்றவியல் போலீசார், பஞ்சாங்கம், நிலம் வாங்கியவர், சாட்சி கையெழுத்திட்டவர்கள், பத்திரம் எழுத உடந்தையாக இருந்த ராஜபாளையம் ஆவுடைநாயகத்தை சேர்ந்த மாரியப்பன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை