| ADDED : செப் 20, 2011 10:10 PM
விருதுநகர்:விருதுநகரில் ஸ்டேஜ் இல்லாமல் புறக்கணித்த ,கோவை, திருநெல்வேலி,
நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர்களுக்கு நோட்டீஸ்
வழங்கப்பட்டுள்ளது.விருதுநகரில் செயல்படும் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு அனைத்து
பஸ்களும் வந்து செல்ல கலெக்டர் மு.பாலாஜி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில்,
பைபாஸ் ரைடர்கள், நெடுஞ்சாலை எக்ஸ்பிரஸ், பாய்ண்ட் டூ பாய்ண்ட் பஸ்கள்,
புது பஸ் ஸ்டாண்ட் வருவதில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்தனர். அதன்படி
ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கோவை, திருநெல்வேலி, நாகர்கோயில்
பகுதிகளிலிருந்து இயக்கப்படும் பைபாஸ் ரைடர் பஸ்களுக்கு மதுரை
மாட்டுத்தாவணியிலிருந்து திருமங்கலம், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி
ஆகிய இடங்களுக்கு மட்டுமே ஸ்டேஜ்கள் வழங்கப்பட்டு கட்டணங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட தலை நகரமாக விருதுநகர் இருந்தும், புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதை
தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில் அரசு
போக்குவரத்து கழக மேலாளர்களுக்கு, விருதுநகர் ஸ்டேஜ் வழங்க
உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ,விருதுநகர் ஸ்டேஜ் ஏன் அறிவிக்கப்படவில்லை
என்ற விளக்கத்துடன் ,செப். 29 ம் தேதி நேரில் ஆஜராகும்படி,' போக்குவரத்து
கழக பொது மேலாளர்களுக்கு , கலெக்டர் மு.பாலாஜி நோட்டீஸ் வழங்கியுள்ளார்.