உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாக்காளர் பட்டியல் ஆலோசனை கூட்டம்

வாக்காளர் பட்டியல் ஆலோசனை கூட்டம்

விருதுநகர் : விருதுநகரில் வாக்காளர் பட்டியல் திருத்த ஆலோசனை கூட்டம் நடந்தது. வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஹனிஸ் சாப்ரா தலைமை வகித்தார்.கலெக்டர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக நடந்த சிறப்பு முகாம்கள் குறித்தும் இரட்டைப் பதிவுகளை நீக்கம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பார்வையாளர் விளக்கினார். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், சிவகாசி சப் கலெக்டர் ப்ரியா ரவிச்சந்திரன், சிவகாசி நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு, அனைத்து ஓட்டுப்பதிவு அலுவலர்கள், உதவி ஓட்டுப்பதிவு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தங்கள் செய்வதற்காக விண்ணப்பித்த மனுக்களை வீடுகளுக்கே சென்று நேரடியாக விசாரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை