உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தென் மாவட்ட ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் நிலை * தேவை கோடை சிறப்பு ரயில்கள்

தென் மாவட்ட ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் நிலை * தேவை கோடை சிறப்பு ரயில்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்:கோடை விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்ட ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் நிலை இருப்பதால் சென்னை, கோவை, புதுச்சேரி, பெங்களூர் பகுதியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மதுரை ,விருதுநகர், தூத்துக்குடி,தென்காசி, திருநெல்வேலி, மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்கள் சென்னை, கோவை, திருப்பூர், புதுச்சேரி, பெங்களூர் உட்பட பல்வேறு நகரங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்து செல்ல போதிய ரயில்கள் இல்லை. தொடர் விடுமுறை நாட்களில் தட்கலில் கூட டிக்கெட் கிடைக்காத நிலை தான் உள்ளது. தற்போது தென் மாவட்டங்களுக்கு இயங்கும் அனைத்து ரயில்களிலும் வெயிட்டிங் லிஸ்ட் நிலை ஏற்பட்டுள்ளது.அடுத்த வாரம் முதல் கோடை விடுமுறை துவங்க உள்ள நிலையில் ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து செல்ல திட்டமிட்டுள்ளனர். சென்னையில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களிலும், பெங்களூரில் இருந்து துாத்துக்குடி, நாகர்கோவிலுக்கு இயங்கும் ரயில்களிலும் வெயிட்டிங் லிஸ்ட் நிலை துவங்கியுள்ளது.எனவே, சென்னையிலிருந்து செங்கோட்டை, திருநெல்வேலி, நாகர்கோவில், போடி நகரங்களுக்கு பகல், இரவு நேர சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்.மேலும், கோவை- - மதுரை ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். மயிலாடுதுறை- செங்கோட்டை ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.காரைக்குடி -- விருதுநகர் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். மதுரையில் இருந்து தினமும் காலையில் புறப்பட்டு போடி சென்று மாலையில் மதுரை திரும்பும் ரயிலை கூடுதல் டிரிப்புகள் இயக்க வேண்டும். மதுரையில் மதியம் 3:00 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை சென்று அங்கிருந்து மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு மதுரை சென்றடையும் வகையில் கூடுதல் பயணிகள் ரயில் இயக்க வேண்டும்.பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும். இதற்கு தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை