உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

சிவகாசி: சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மார்க்சிஸ்ட்சார்பில் அனுப்பன்குளம் நாரணாபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாநகர செயலாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேவா, பாலசுப்பிரமணியன் பேசினர். அனுப்பன்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டியாபுரத்தில் குடிநீர் வழங்க வேண்டும், நாரணாபுரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு செல்லும் ரோட்டை சீரமைக்க வேண்டும், போஸ் காலனியில் வறுகால் வசதி செய்து தர வேண்டும், பள்ளபட்டி ஊராட்சி லிங்கபுரம் காலனி முதல் முத்தாட்சி மரம் வரை ஓடையை துார்வாரி தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும், உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது. துவக்கத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை