மேலும் செய்திகள்
குளம் அருகே அங்கன்வாடி தடுப்பு இல்லாததால் அச்சம்
30-Jul-2025
சாத்துார் : சாத்துார் மேலக்காந்தி நகரில் அங்கன்வாடி பள்ளி முன்பு கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக் கேட்டால் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். சாத்துார் மேலக் காந்தி நகரில் கழிவுநீர் நீரேற்று நிலையம் அருகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு முன்பு செல்லும் வாறுகால் துார்ந்து போன நிலையில் உள்ளது. இதனால் வாறுகாலில் கழிவுநீர் செல்லாமல் குழந்தைகள் அங்கன்வாடிக்கு செல்லும் பாதையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கழிவுநீரில் கால் வைத்தே அங்கன்வாடி பள்ளிக்கு குழந்தைகளை பெற்றோர் கொண்டு சென்று விடுகின்றனர். சிறிய மழை பெய்தாலும் அங்கன்வாடி பள்ளிக்கு செல்லும் வாசலில் கழிவுநீரும் மழை நீரும் கலந்து குளம் போல் தேங்கி விடுகிறது. இதனால் மழைக்காலத்தில் குழந்தைகளை அங்கன்வாடி பள்ளிக்கு கொண்டு வந்து விடாமல் பெற்றோர் தவிர்த்து வருகின்றனர். மேலும் இந்த கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்கடியால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். துார்ந்து போன நிலையில் உள்ள வாறுகாலை புதியதாக கட்டவும், அங்கன்வாடிக்கு செல்லும் பாதையில் தேங்கும் கழிவு நீரை அகற்றவும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
30-Jul-2025