உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துாரில் ஆமை வேகத்தில் நடைபெறும் குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கும் பணி

சாத்துாரில் ஆமை வேகத்தில் நடைபெறும் குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கும் பணி

சாத்துார், : சாத்துாரில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் குடிநீர் பகிர்மானம் குழாய் பதிக்கும் பணியால் மக்கள் அவதிப்படுகின்றனர்.சாத்துார் நகராட்சிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேல காந்தி நகரில் அனைத்து பகுதிக்கும் சீராக குடிநீர் விநியோகம் கிடைக்கவில்லை என புகார் எழுந்த நிலையில் பைபாஸ் ரோடு சொக்கலிங்கம் பூங்காவில் புதியதாக குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டிகுடிநீர் வினியோகம் செய்யநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.இதன்படி சொக்கலிங்கம் பூங்காவில் புதியதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணி நடந்து வருகிறது.இந்த புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக சாத்துார் புதியதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதற்காக போக்குவரத்து நகருக்கு எதிரே புதுப்பாளையம் பகுதியில் குடிநீர் பகிர்மானக் குழாய் லாரியில் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டது. இந்த குழாய் கொண்டு வரப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகும் நிலையில் இன்று வரை பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணியும் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் மேலக் காந்தி நகரில் பழைய முறைப்படி ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் ஒவ்வொரு பகுதியாக வழங்கப்பட்டு வருகிறது.குடிநீர் பகிர்மான குழாயை விரைவில் பதித்து புதிய மேல்நிலை குடிநீர் தொட்டியை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் இந்த பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்பதால் குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை