உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பெரியகுளம் கண்மாயில் குழாய் உடைந்து 5 ஆண்டாக வீணாகும் குடிநீர்

பெரியகுளம் கண்மாயில் குழாய் உடைந்து 5 ஆண்டாக வீணாகும் குடிநீர்

சிவகாசி: சிவகாசி பெரியகுளம் கண்மாய் வழியாக விஸ்வநத்தம் செல்லும் குடிநீர் குழாய் உடைந்து 5 ஆண்டுகளாக குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சிக்கு பெரியகுளம் கண்மாயிலுள்ள கிணற்றிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இதற்காக கண்மாயில் துாண்கள் அமைக்கப்பட்டு இரும்பு குழாய் வைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்பட்டு விஸ்வநத்தில் உள்ள தொட்டியில் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்படுகின்றது. இந்த இரும்பு குழாய் சேதமடைந்து ஐந்து ஆண்டுகளாக குடிநீர் வீணாக கண்மாயில் கலக்கிறது. இதனால் விஸ்வநத்தம் ஊராட்சி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே சேதம் அடைந்த குழாயை மாற்றி குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை