உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முகவூரில் குழாய் உடைப்பால் ரோட்டில் வீணாகும் குடிநீர்

முகவூரில் குழாய் உடைப்பால் ரோட்டில் வீணாகும் குடிநீர்

தளவாய்புரம்: முகவூர் அருகே மெயின் ரோட்டில் தாமிரபரணி குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தளவாய்புரத்திலிருந்து முகவூர் வழியே சேத்துார் செல்லும் மெயின் ரோட்டில் அப்பகுதி கிராமங்களுக்காக தாமிரபரணி குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது. மெயின் ரோட்டின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இக்குழாயில் அழுத்தம் காரணமாக அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வந்தது. தொடர் குழாய் உடைப்பு காரணமாக காமராஜர் சிலையிலிருந்து கூட்டுறவு வங்கி மேட்டு தெரு வரை புதிய குழாய் பதித்து பணிகள் நடந்தது. இதற்கு அடுத்த முத்துச்சாமிபுரம் சாலியர் தெரு முன்பு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ரோட்டில் கடந்த சில நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது.இது குறித்து கணேசன்: பல ஆண்டுகளாக குழாய் உடைப்பு என்பது இப்பகுதியில் பிரச்சனையாக இருந்து வந்தது. இதனால் மெயின் ரோடும் சேதம் ஆகி மேடு பள்ளமாக மாறி இருந்தது. தற்போது தளவாய்புரத்திலிருந்து சேத்துாருக்கு செல்லும் தாமிரபரணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ரோட்டில் குடிநீர் வீணாகிறது. நிரந்தர தீர்வு காண ஏற்பாடு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ