உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மழையால் பிளவக்கல் அணையில் ஒரே நாளில் 6 அடி நீர்மட்டம் உயர்வு

மழையால் பிளவக்கல் அணையில் ஒரே நாளில் 6 அடி நீர்மட்டம் உயர்வு

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் மழையால் நேற்று ஒரே நாளில் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வத்திராயிருப்பு தாலுகாவில் அணைகள், கண்மாய்கள் வறண்டு காணப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழையினால் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. பெரியாறு அணையில் நேற்று முன்தினம் 18 .54 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததில் அணைக்கு வினாடிக்கு 212.46 கன அடி தண்ணீர் வரத்து ஏற்பட்டு அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்து 24.21 அடியாக தண்ணீர் உள்ளது. அதே நேரம் கோவிலாறு அணையில் 37.8 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஆனால் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக காணப்பட்டது. தற்போது அணையில் 11.32 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. வத்திராயிருப்பில் 12.4 மி. மீ., ஸ்ரீவில்லிபுத்தூரில் 3. 60 மி. மீ., மழை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்ய துவங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை