உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  குடிநீர் தேவைக்காக கிருதுமால் நதியில் 8 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

 குடிநீர் தேவைக்காக கிருதுமால் நதியில் 8 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

காரியாபட்டி: குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க, குடிநீர் பற்றாக்குறையை போக்க கிருதுமால் நதியில் 8 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி பங்கேற்றனர். நரிக்குடி, திருச்சுழி பகுதி விவசாயிகள் மழை, வைகை நதியிலிருந்து கிடைக்கும் நீரை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். அப் பகு தியில் போதிய பருவமழை இல்லாததால் கண்மாய்களில் நீர்வரத்து இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதையடுத்து வைகை நதியில் வீணாகும் நீரை கிருதுமால் நதியில் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று அமைச்சர் தங்கம் தென்னரசு வைகை அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்தார். விவசாயம், கால்நடைகள், குடிநீர் தேவைக்காக 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் 450 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கிட அரசாணை பெறப்பட்டு, நேற்று திறந்து விடப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி, எம்.எல்.ஏ., தமிழரசி பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி