மாணவர்களுக்கு வரவேற்பு விழா
சாத்துார்: சாத்துார் மேட்டமலை ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது.கல்லுாரிதலைவர் ராஜு தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாப்பா ராஜு செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர்.முதல்வர் உஷா தேவி குத்துவிளக்கு ஏற்றினார். மாணவி முத்து கஜலட்சுமி வரவேற்றார்.விழாவில் நடிகை தேவயானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.மாணவி அமுதா நன்றி கூறினார்.விழாவில் மாணவர்கள் அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.