உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோல்வார்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மேல்தளம்,  வளாக சுற்றுச்சுவர் சேதம் எப்போது விழிக்கும் அறநிலையத்துறை

கோல்வார்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மேல்தளம்,  வளாக சுற்றுச்சுவர் சேதம் எப்போது விழிக்கும் அறநிலையத்துறை

விருதுநகர்: விருதுநகர் கோல்வார்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சேதமடைந்த நிலையில் உள்ள பக்கவாட்டு சுற்றுச்சுவர், மேல்தள கல் ஆகியவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாத்துார் அருகே விருதுநகர் ஒன்றியத்திற்குட்பட்ட எல்லையில் கோல்வார்பட்டி அமைந்துள்ளது. இங்கு பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த பாண்டியர் கால பழமையான கோயில் பல ஆண்டுகளாக திறக்கப்படாததால் சிதிலமடைந்து காணப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு முன்மீண்டும் திறக்கப்பட்டபோது இதை ஆன்மிகவாதிகள், தொண்டு நிறுவனத்தார் மூலம் பேவர் பிளாக் கற்கள் பதித்து பக்தர்கள் நடந்து செல்ல வழிவகை செய்யப்பட்டது. இந்த கோயிலை முழுமையாக கட்டி முடிக்கும் முன்னரே பணியை மேற்கொண்ட கலங்காத கண்டப்பநாயக்கர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.இதனால் மீனாட்சி அம்மன் கோயிலில் கருவறை கோபுரம், கோயில் ராஜ கோபுரம் ஆகியவை கட்டப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு தான் ஹிந்துசமய அறநிலையத்துறை சொக்கநாதசுவாமிக்கு மட்டும் நிதி ஒதுக்கி கருவறை கோபுரம் கட்டியது. ராஜகோபுரமும், மீனாட்சி அம்மனுக்கு கருவறை கோபுரமும் அமைக்க வேண்டி பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.அதே போல கோயில் வளாகத்தில் பைரவரை வழிபட செல்லும் இடத்தில் மேல்தள கல் சேதமடைந்து உள்ளது. இதனால் பக்தர்கள் யாரும் அப்பகுதி வழியே செல்வதில்லை. பழமையும், பெருமையும் மிகுந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை பல ஆண்டுகளாக அறநிலைய துறை புறக்கணித்தே வருகிறது. கிராமத்தில் அமைந்துள்ளதால் போக்குவரத்துக்கும் உரிய வசதிகள் கிடைக்காத நிலை உள்ளது. இக்கோயிலில் தேவைப்படும் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டாலே நாளடைவில் மக்கள் வரத்தும் அதிகரிக்கும், பஸ் போக்குவரத்தும் எளிதாக்கப்படும்.ஆனால் அறநிலையத்துறையோ வேண்டுமென்றே கோயிலை புறக்கணிப்பது போல் குறைபாடுகள் எதையும் நிவர்த்தி செய்யாமல் அலட்சியம் செய்து வருகிறது. ஆகவே வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலை சீரமைத்து பக்தர்கள் வழிபட உதவ வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி