வெள்ளை கோட்அணிவித்தல் விழா
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் இந்த கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மாணவர்களை மருத்துவத்துறைக்குள் அதிகாரப்பூர்வமாக வரவேற்கும் விதமாக வெள்ளை கோட் அணிவித்தல் விழா டீன் ஜெயசிங் தலைமையில் நடந்தது. கல்லுாரி துணை முதல்வர் கண்ணன் முர்துராமன், மாணவ ஆலோசகர் எத்தியா, மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, துணை மருத்துவமனை கண்காணிப்பாளர் அன்புவேல், உயிர்வேதியியல், மயக்கவியல், தடயவியல், மருந்தியல் துறைத்தலைவர்கள் ரேகா, சேகர், சீதாலட்சுமி, சித்தார்த்தன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் 144 மாணவர்கள் தங்களின் வெள்ளை கோட் அணிந்து மருத்துவர் உறுதிமொழி எடுத்தனர்.