உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பால் வியாபாரி இறப்பில் சந்தேகம் மனைவி, மகளிடம் விசாரணை

பால் வியாபாரி இறப்பில் சந்தேகம் மனைவி, மகளிடம் விசாரணை

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே துாக்கிட்ட நிலையில் பால் வியாபாரி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் உடலில் காயம் இருந்ததால் போலீசார் மனைவி, மகளிடம் விசாரிக்கின்றனர். ராஜபாளையம் அருகே எம்.பி.கே புதுப்பட்டியை சேர்ந்த பால் வியாபாரி சுப்பிரமணி 60, மனைவி ஈஸ்வரி 55, மகள்கள் ராஜலட்சுமி, தேவயானி உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வசித்து வருகின்றனர். இளைய மகள் தேவயானி கணவனுடன் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் பராமரிப்பில் வசிக்கிறார். கணவருடன் சேர்ந்து வாழுமாறு சுப்பிரமணி மகளுக்கு அறிவுரை கூறி வந்ததால் மனைவி, மகளிடம் பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சுப்பிரமணி துாக்கிட்டு இறந்த நிலையில் மனைவி, மகள் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.இந்நிலையில் சுப்பிரமணியின் உடலில் ரத்த காயம் இருந்ததால் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது சகோதரர் சஞ்சீவி தகவல் அளித்தார். அதன் பேரில் வடக்கு போலீசார் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மனைவி ஈஸ்வரி, மகள் தேவயானி இருவரிடம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ