உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரியாபட்டி நீதிமன்றத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டப்படுமா

காரியாபட்டி நீதிமன்றத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டப்படுமா

காரியாபட்டி: காரியாபட்டியில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் குற்றவியல் நடுவர், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு நிரந்தர கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வக்கீல்கள் எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டியில் சில மாதங்களுக்கு முன் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறக்கப்பட்டது. பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. அக்கட்டடத்தில் தற்காலிகமாக வசதிகள் செய்யப்பட்டன. இருந்தாலும் இது போதுமானதாக இல்லை. வழக்குகள் சம்பந்தமாக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே கழிவுநீர் தேங்கும் குளம் உள்ளது.இதிலிருந்து வெளியாகும் துர்நாற்றம் அங்கு இருப்பவர்களை முகம் சுளிக்க செய்கிறது. கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது. வக்கீல்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது. காரியாபட்டியில் ஏராளமான அரசு நிலங்கள் உள்ளன. இதனை தனி நபர்கள் ஆக்கிரமித்து உரிமை கொண்டாடி வருகின்றனர். அதுபோன்ற இடங்களை கண்டறிந்து மக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் இடம் தேர்வு செய்து, கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வக்கீல்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை