உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சதுரகிரி செல்ல அனுமதி உண்டா டிச.27ல் தெரியும் டிச.27ல் தெரியும்

சதுரகிரி செல்ல அனுமதி உண்டா டிச.27ல் தெரியும் டிச.27ல் தெரியும்

ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மார்கழி பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்கு, மழை சூழலை பொறுத்து பக்தர்களை அனுமதிப்பது குறித்து டிச. 27ல் அறிவிக்கப்படுமென வனத்துறை தெரிவித்துள்ளது.இக்கோயிலில் டிச. 28ல் மார்கழி பிரதோஷம், டிச. 30ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. பக்தர்களை அனுமதிப்பதற்கு முதல் நாள் மலைப்பகுதியில் நிலவும் மழை சூழலை பொறுத்தும், இந்திய வானிலை மைய அறிவிப்பை பொறுத்தும் டிச. 27ல் வனத்துறை சார்பில் அறிவிக்கப்படும் என புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி