புது பஸ் ஸ்டாண்டில் டூவீலர் பார்க்கிங் வசதி மேம்படுத்தப்படுமா வெளியூர் பயணிகள் விருப்பம்
விருதுநகர் : விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் டூவீலர் பார்க்கிங் வசதியை மேம்படுத்தவும், அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து எடுக்க வேண்டும் என வெளியூர் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் ஆக. 21ல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், சிவகாசி, கோவில்பட்டி செல்லும் பஸ்கள் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து தற்போது இயக்கப்பட்டு வருகிறது.இதனால் வெளியூரில் இருந்து விருதுநகருக்கு வந்து பணிபுரிந்து செல்பவர்கள் பெரும்பாலும் புது பஸ் ஸ்டாண்டில் டூவீலர்களை நிறுத்தி விட்டு பஸ்சில் பயணிக்கின்றனர். இவர்கள் மறுநாள் வழக்கம் போல பணிக்கு வரும் போது இங்கிருந்து டூவீலரை எடுத்து செல்கின்றனர்.டூவீலர்களை பார்க்கிங் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இங்குள்ள டூவீலர் பார்க்கிங் வசதி நிறைந்து வாகனங்கள் பஸ் ஸ்டாண்ட்டை சுற்றி நிறுத்தப்பட்டு வருகிறது.இதன் 200வது நாள் கொண்டாட்டங்கள் நடந்த நிலையில் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும் விருதுநகரில் பங்குனி பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்பார்கள்.எனவே விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் வெளியூர் பயணிகளின் நலன் கருதி டூவீலர் பார்க்கிங் வசதியை மேம்படுத்த தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் விரைந்து எடுக்க வேண்டும்.