மேலும் செய்திகள்
கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
16-Apr-2025
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கோட்டையூரில் வரதட்சனை துன்புறுத்தலால் கடந்த ஆண்டு திருமணமான பூஜா 24, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.வத்திராயிருப்பு அருகே கோட்டையூரை சேர்ந்தவர் பாண்டி குமார் 29, டிரைவர். இவருக்கு கடந்த ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் வேங்கட சமுத்திரத்தைச் சேர்ந்த பூஜா 25, என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.பாண்டிகுமாரும், அவரது குடும்பத்தினரும் பூஜாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த பூஜா நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு தனது கணவரின் தாத்தாவிற்கு சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.வத்திராயிருப்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். சிவகாசி சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் நேற்று காலை, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தினார்.
16-Apr-2025