மேலும் செய்திகள்
கோடை விவசாயத்திற்கு வயல்களில் வாத்து கிடை
25-Feb-2025
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி ராமசாமியாபுரத்தில் வயலில் களை எடுத்துக் கொண்டிருந்த பூரணம் 45 என்ற பெண்ணை காட்டு பன்றி தாக்கியதில் காயமடைந்தார்.நேற்று முன் தினம் காலையில் கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சேர்ந்த பூரணம் என்பவர் தனது வயலில் பெண்களுடன் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது முள்புதரில் பதுங்கி இருந்த காட்டுப்பன்றி பூரணத்தை தாக்கியதில் காயமடைந்தார்.அங்கிருந்தவர்கள் காட்டுப்பன்றியை விரட்டி விட்டு, பூரணத்தை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு வனத்துறையினர், கூமாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Feb-2025