உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அச்சங்குளத்தில் 6 மாதமாக செயல்படாத குளியல் தொட்டி: மின் மோட்டார் சிரமத்தில் பெண்கள்

அச்சங்குளத்தில் 6 மாதமாக செயல்படாத குளியல் தொட்டி: மின் மோட்டார் சிரமத்தில் பெண்கள்

காரியாபட்டி: காரியாபட்டி அச்சங்குளத்தில் குளியல் தொட்டியில் 6 மாதமாக மின் மோட்டார் செயல்படாததால் பெண்கள் சிரமப்படுகின்றனர். காரியாபட்டி அச்சங்குளத்தில் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பெண்களுக்கான குளியல் தொட்டி 2 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆறு, குளங்களில் தண்ணீர் இல்லாத குறையை குளியல் தொட்டி போக்கியது. பெண்கள் குளிக்க, துணி துவைக்க பயன்படுத்தி வந்தனர். கூலி வேலைக்கு சென்று வரும் பெண்களுக்கு எந்த நேரமும் குளிக்க தண்ணீர் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் 6 மாதங்களுக்கு முன் மின் மோட்டார் பழு தானது. தண்ணீர் சப்ளை இல்லாததால் குளிக்க, துணி துவைக்க முடியாமல் பெண்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். நீர்நிலைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், குழாய்களில் வரும் தண்ணீரை குடங்களில் பிடித்து குளிக்க, துணி துவைக்க பயன்படுத்தி வருகின்றனர். இது போதுமானதாக இல்லை. குழாயில் தண்ணீர் எப்போது வருமோ அப்போது பிடித்து குளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு செயல்படாத மின் மோட்டாரை பழுது நீக்கி, செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமப் பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை