உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முடுக்கன்குளத்தில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

முடுக்கன்குளத்தில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

காரியாபட்டி: காரியாபட்டி முடுக்கன்குளத்தில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.காரியாபட்டி துணை மின் நிலையத்திலிருந்து முடுக்கன்குளம், மாந்தோப்பு, சித்துமூன்றடைப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மழை நேரங்களில் மின் பாதையில் பிரச்னை ஏற்பட்டால் ஒட்டுமொத்தமாக மின்சாரத்தை நிறுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது. அனைத்து பகுதிகளும் இருளில் மூழ்கும் நிலை உள்ளது. இதையடுத்து முடுக்கன்குளத்தில் துணை மின் நிலையம் அமைக்க ரூ. 33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கி 80 சதவீதம் முடிவடைந்துள்ளன. தற்போது, ஆவியூரிலிருந்து புல்வாய்க்கரைக்கும், முத்துராமலிங்கபுரத்திலிருந்து நரிக்குடி துணை மின் நிலையத்திற்கும் மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த மின் வழித்தடத்தில் பிரச்னை ஏற்படும் பட்சத்தில் உடனடியாக முடுக்கன் குளத்திலிருந்து மற்ற துணை மின் நிலையங்களுக்கு எளிதில் சப்ளை வழங்க முடியும்.அதேபோல் காரியாபட்டி, முடுக்கன்குளம் பகுதியில் மின் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய முடியும். மேலும் மறைக்குளம், துலுக்கன்குளம், மாந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தனித்தனி பீடர் அமைக்கப்பட்டு வருகிறது. பிரச்னை ஏற்பட்டால் அந்தந்த பகுதியில் உள்ள பீடரில் மின் நிறுத்தம் செய்து சீரமைப்பு பணி செய்ய முடியும். மற்ற பகுதிகளுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்க முடியும். விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !