உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முறையாக நடக்காத ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

முறையாக நடக்காத ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

விருதுநகர் விருதுநகரில் நீதிமன்ற உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறையினரின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி சரிவர நடக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.விருதுநகர் பாத்திமாநகர் ஆத்துப்பாலத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் தனியார் ஆக்கிரமித்து இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பாலசுப்பிரமணியன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்றம் ஆக்கிரமிப்புகள் அகற்ற நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் போலீசார், நகராட்சியினரோடு இணைந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.நெடுஞ்சாலைத்துறையினர் கடைகளின் படிக்கட்டுகள், பந்தல்கள் உள்ளிட்டவைகளை அகற்றினர். ஆனால் பாலத்தின் அருகே கட்டடத்தை அகற்றவில்லை.அப்போது அங்கிருந்தவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டுமென நெடுஞ்சாலைத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறையினர், தகர செட், கட்டடம் உள்ள இடத்திற்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அப்போது உயர்நீதிமன்றத்தால் அப்பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே, அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கூறினர். ஆனால் நெடுஞ்சாலைத்துறையினரிடம் எல்கை வரைபடம் குறித்த எவ்வித ஆவணமும் இல்லை. இதனால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுப்படி ஆக்கரமிப்புகள் சரியாக அகற்றப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை