உலக மருந்தாளுநர் தினம்
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பார்மசி கல்லுாரி, இந்திய மருந்தியல் சங்கம் சார்பில் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் உலக மருந்தாளுநர் தின விழா கல்லூரி தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. விழாவில் டாக்டர் பாலகிருஷ்ணன், முதல்வர் வெங்கடேசன் பாதுகாப்பான மருந்து பயன்பாட்டை உறுதி செய்வதில் மருந்தாளுநர்களின் முக்கிய பங்களிப்புகள் குறித்தும், மருந்தாளுநர்கள் வீணா ராணி, வெண்ணிலா நோயாளிகள் பராமரிப்பு பற்றியும் பேசினர். ஏற்பாடுகளை பேராசிரியர் சந்தனகுமார் செய்திருந்தார். டாக்டர் தன்ராஜ் நன்றி கூறினார்.