உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்டத்தில் உலக யோகா தின விழா கொண்டாட்டம்

மாவட்டத்தில் உலக யோகா தின விழா கொண்டாட்டம்

விருதுநகர்:விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி., மாணவர்களால் யோகா தினம் தலைமையாசிரியர் முருகேசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை என்.சி.சி., அதிகாரிகள் வைரமணி பாண்டியன், ஜெயபிரகாஷ் செய்தனர்.* விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் தேசிய யோகா விளையாட்டு சாம்பியன் அபினேஷ் குமார் உள்பட குழுவினர் பல்வேறு ஆசனங்கள், முத்ரா அடங்கிய பயிற்சியை தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு அளித்தனர். இதில் கல்லுாரி முதல்வர் சாரதி, பள்ளி தலைமையாசிரியர் ஜமுனா ராணி, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் மஞ்சு, சிவஜோதி, மகாலட்சுமி, உடற்பயிற்சி ஆசிரியர் ரேவதி உள்பட பலர் பங்கேற்றனர்.* அருப்புக்கோட்டையில் உலக யோகா தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் சார்பு நீதிபதி சதீஷ் தலைமையில் யோகா பயிற்சி நடந்தது. பயிற்றுனர் விஜயராகவன் பயிற்சி அளித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆனந்தவள்ளி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவரஞ்சனி, குற்றவியல் நீதிபதி ஜெயப்பிரதா, வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் கோர்ட் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.* அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியில் கல்லூரி செயலர் சங்கரசேகரன் தலைமை வகித்தார். தலைவர் மயில்ராஜன், முதல்வர் ராதா முன்னிலை வகித்தனர். என்.சி.சி., கேப்டன் சுப்பிரமணியன் வரவேற்றார். யோகா ஆசிரியர் சுந்தர்ராஜன் பயிற்சி அளித்தார். மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் பாக்கியராஜி, சுரேஷ் செய்தனர். என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர் அனிதா நன்றி கூறினார்.* காரியாபட்டியில் சிவானந்தா யோகாலயாத்தில் பயிற்சி ஆசிரியர் வேல் ராமலிங்கம் தலைமையில் நடந்தது. ஏராளமானோர் யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர்.* சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனிகுரு கலை அறிவியல் கல்லுாரியில் நிறுவனர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தாளாளர் பழனி குரு முன்னிலை வகித்தார். முதல்வர் நாகலட்சுமி வரவேற்றார். மாணவிகள் பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர். பேராசிரியை சுமதி நன்றி கூறினார். துறை தலைவர்கள், பேராசிரியைகள் மாணவிகள் கலந்து கொண்டனர்.* ராஜபாளையம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் சக்கராஜா கோட்டை விளையாட்டு திடலில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் அமல்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் ரவிக்குமார், செயலாளர் ராமசுப்பிரமணியன் ஹிந்து அமைப்பினர், நகர் பிரமுகர்கள் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்தனர்.* சிவகாசி எஸ்.எப்.ஆர்.,மகளிர் கல்லுாரியில் கல்லுாரி தலைவர் திலகவதி, செயலர் அருணா வழி நடத்தினர். உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி வரவேற்றார் .கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். சிவகாசி சங்கல்ப யோகா நிலையம் நாகலட்சுமி மாணவிகளுக்கு யோகா குறித்து விளக்கி பயிற்சி அளித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வளர்மதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உடற் கல்வித்துறை ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் விஜயபிரியா, மீனாட்சி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், தேசிய மாணவர் படை பொறுப்பாசிரியர்கள் செய்தனர்.* சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தேவி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராஜீவ் காந்தி மாணவர்களுக்கு யோகாசனம் குறித்து பயிற்சி அளித்தார். நாட்டு நல பணி திட்ட அலுவலர் மாரீஸ்வரன் நன்றி கூறினார்.* சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சதீஷ்குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். மதுரை காமராஜ் பல்கலை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி , மாவட்ட பசுமை பாரத் இளைஞர் அலுவலர் ஞானச்சந்திரன், மாவட்ட சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார், சென்னை உதவும் உள்ளங்கள் அறங்காவலர் சந்தானம், பிரகாஷ் பேசினர். மாணவர்களுக்கு யோகாசன போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. யோகா பயிற்சியாளர்கள் ரமேஷ், அசோக் பயிற்சி அளித்தனர். உடற்கல்வித்துறை தலைவர் முருகன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் பால் ஜீவ சிங் மாவட்ட மை பாரத் இளைஞர் அமைப்பு செய்தனர்.* ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் வெங்கடாசலபதி தலைமையில் நடந்தது. முதல்வர் சுந்தர மகாலிங்கம் முன்னிலை வகித்தார். யோகா ஆசிரியை பூமதி யோகாசனத்தின் பயன்கள் குறித்து பேசினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.* அரிமா பொன்னையா யோகாசன நிலையத்தில் மாஸ்டர் அய்யனார் தலைமையில் யோகாசனம் நடந்தது. யோகா மைய நிர்வாகிகள், உறுப்பினர்கள், அல்ட்ரா சிமெண்ட் பணியாளர்கள் பங்கேற்கின்றனர். பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.* எஸ்.என்.எஸ். அகாடமி சார்பில் தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில் யோகா தினம் நடந்தது.மாஸ்டர்கள் சமுத்திரம், ராஜாமணி, லட்சுமணன், சுவாமி முருகானந்த சரஸ்வதி பேசினர்.நிர்வாகிகள், மாணவர்கள் பங்கேற்றனர்.* விருதுநகர் ஸ்ரீ வித்யா கலை, அறிவியல் கல்லுாரியின் மகளிர் மன்றம், பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் ராஜயோக தியான நிலையம் சார்பில் உலக யோகா தின விழா ஸ்ரீ வித்யா கல்வி குழும தலைவர் திருவேங்கட ராமானுஜதாஸ் தலைமையில் நடந்தது.இதில் கல்லுாரி முதல்வர் கணேசன், துணை முதல்வர் பசுபதி, கணிதவியல் துறை உதவி பேராசிரியர் பிரவீணா உள்பட பலர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர் ராஜயோக தியான நிலைய பொறுப்பு சகோதரி செல்வி பேசினார். கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் ரம்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை