இளம்பெண் புகைப்படத்தை தவறாக சித்தரித்து பதிவிட்ட வாலிபர் கைது
விருதுநகர்; இளம்பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சாத்துாரைச் சேர்ந்த சிவசுப்பிரமணியனை 27, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.25 வயதுடைய இளம்பெண்ணின் சமூக வலைதள கணக்கை அடையாளம் தெரியாத மர்ம நபர் பின் தொடர்ந்தார். அதில் இளம்பெண் பதிவிட்ட புகைப்படங்களை எடுத்து ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் மார்ச் 31ல் அந்த மர்ம நபர் பதிவிட்டுஉள்ளார்.இதையடுத்து இளம்பெண் விருதுநகர் சைபர் கிரைம் போலீசாரிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், மர்ம நபர் சென்னை வியாசர்பாடியைச்சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பதும், அவர் தற்போது சாத்துாரில் இருப்பதும் தெரிந்தது. தனிப்படை போலீசார் சிவசுப்பிரமணியனை கைதுசெய்து நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.