உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

 குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

சாத்துார்: சாத்துாரை சேர்ந்தவர்கள் தருண் குமார் 25, சஞ்சீவி 20. இருவரும் கடந்த அக். 18 ல் பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்த மேல காந்தி நகர் வீராசாமி 38,யிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறிப்பு செய்தார். இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தருண்குமார் மீது இது போன்று பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க நேற்று கலெக்டர் சுகபுத்ரா உத்தர விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !