உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வேன் - டூவீலர் மோதல் இளைஞர் பலி

வேன் - டூவீலர் மோதல் இளைஞர் பலி

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே ராமசாமி நகரை சேர்ந்தவர் விஜயகுமார் 29. இவர் தனது தாய் குணசுந்தரி 55, உடன், நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு, டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) காரியாபட்டி அருகே உள்ள கணக்கநேந்தல் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அருப்புக்கோட்டை அருகே, மதுரை - துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் கோவிலாங்குளம் சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்தபோது, ஊருக்குள் சென்ற வேன் பைக்கின் மீது மோதியதில் தாய், மகன் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரையும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு விஜயகுமார் இறந்தார். தாலுகா போலீசார் வேன் டிரைவர் மாரீஸ்வரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ