கல்லை துாக்கி போட்டு இளைஞர் கொலை
திருச்சுழி: திருச்சுழி அருகே செந்நிலைகுடியை சேர்ந்தவர் அசோக்ராஜ்,37, இவர் மதுரையில் உடைந்த பாத்திரங்களை அடைக்கும் தொழில் செய்து வந்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வந்தார். இவர் குடிப்பழத்திற்கு அடிமையாகி உள்ளார். தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்து உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று அதிகாலையில் ஊரில் உள்ள நாடக மேடை அருகே அசோக்ராஜ் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். டி.எஸ்.பி., பொன்னரசு, இன்ஸ்பெக்டர் அப்துல்லா ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர்.