உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கி.கிரி நகராட்சியில் கை சின்னம் யாருக்கு : மூன்று காங்கிரசார் போட்டியால் குழப்பம்

கி.கிரி நகராட்சியில் கை சின்னம் யாருக்கு : மூன்று காங்கிரசார் போட்டியால் குழப்பம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவர் பதவிக்கு, காங்கிரஸ் சார்பில், மூன்று பேர், கட்சியின் அங்கீகாரப் படிவத்துடன் மனு தாக்கல் செய்துள்ளதால், யாரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட, 10க்கும் மேற்பட்டோர், கட்சித் தலைமையிடம் விருப்ப மனு அளித்திருந்தனர். ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை என்ற துரைசாமி அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போட்டியிடுவதற்கான அங்கீகாரப் படிவமும், துரைசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜாவித் என்பவரும், தேர்தலில் போட்டியிட, கட்சியால் அங்கீகரிக்கப்படும், 'பி' படிவத்துடன், தேர்தல் நடத்தும் அலுவலரை நேற்று சந்தித்தார். இது போன்று, முபாரக் என்பவரும், படிவத்துடன் வந்தார். இவர்கள் மூவரின் விண்ணப்பத்தையும், தேர்தல் நடத்தும் அலுவலர் பெற்றுக் கொண்டார்.

இது குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலரான நகராட்சி கமிஷனர் லோகநாதனிடம் கேட்டபோது, ''இது குறித்து, இப்போது எதுவும் கூற முடியாது. வேட்பு மனுக்கள் பரிசீலனையில் தான், யாருக்கு கை சின்னம் வழங்க முடியும் என்பது தெரிய வரும்'' என்று கூறினார்.

வேட்பு மனு தாக்கல் செய்ய, ஒரே கட்சியைச் சார்ந்த பலரும், ஒரே இடத்தில் மனு தாக்கல் செய்திருந்தாலும், கட்சியே அங்கீகரித்து வழங்கக் கூடிய, 'பி' படிவத்துடன், மூன்று பேர் மனு தாக்கல் செய்திருப்பது, காங்கிரசின் கோஷ்டிப் பூசலின் உச்ச கட்டத்தைக் காட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

spr
செப் 22, 2025 18:43

இந்த மண்ணின் மைந்தர் உலகனைத்தும் போற்றுகின்ற வகையில் அறிமுகப்படுத்திய இது ஒரு மிகச் சிறப்பான கண்டுபிடிப்பே பாராட்டுவோம். இவருக்குத் தமிழக அரசு நேர்மையான வழியில் உதவி, இவரது கண்டுபிடிப்பு மக்களுக்குப் பயன்பட உதவ வேண்டும். நீர்தான் மாற்றப்படுகிறது, நல்ல நீரல்லாது, வீட்டுக் கழிவுநீரைப் பயன்படுத்தி எரிபொருளாக மாற்றினால், கழிவு நீரும் முறையாக அகற்றப்படும். அதற்கான எழவும் குறையும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை