உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரையில் கருத்தரங்கு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரையில் கருத்தரங்கு

கடலூர் : மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் வரும் 30ம் தேதி மதுரையில் கருத்தரங்கு மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளது என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலர் சீனிவாசன் கூறினார்.

கடலூரில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து போராடிய சங்க நிர்வாகிகளை கடந்த ஆட்சியில் அழைத்துப் பேசி தீர்வு காணவில்லை. தற்போதைய முதல்வர் தனது தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில் அரசு ஊழியர் சங்கம் முதல்வரை சந்தித்து அரசு ஊழியர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

அதில், அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். அரசு ஊழியர் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். 6வது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்@ளாம்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் தற்போது வட்ட அளவிலும், செப்டம்பர் மாதம் மாவட்ட அளவிலும், நவம்பர் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை கிருஷ்ணகிரியில் 10வது மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது. மேலும், மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து வரும் செப்டம்பர் 6ம் தேதி கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடத்த அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

அதன்படி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வரும் 30ம் தேதி மதுரையில் கருத்தரங்கம் மற்றும் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளது. இதனை கோவை எம்.பி., நடராஜன், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலர் முத்துசுந்தரம், சி.ஐ.டி.யூ., மாநில பொருளாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இவ்வாறு மாநில பொதுச் செயலர் சீனிவாசன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை