உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாதி சான்றிதழுக்கு அன்னக்காவடி எடுக்க கூறும் அதிகாரி: விரக்தியில் மாணவர்கள்

சாதி சான்றிதழுக்கு அன்னக்காவடி எடுக்க கூறும் அதிகாரி: விரக்தியில் மாணவர்கள்

ராமநாதபுரம்: சாதி சான்றிதழ் கேட்டவர்களிடம், ''அன்னக்காவடி எடுத்து ஆண்டியாக வாருங்கள், சான்றிதழ் தருகிறேன்'' என்று அதிகாரி திருப்பி அனுப்புவதால், மாணவர்கள் விரக்தியில் உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் சத்யாநகர், சேதுபதி நகர் பகுதியை சேர்ந்த 45 மாணவ, மாணவிகளின் பெற்றோர் பூ வியாபாரம் செய்கின்றனர். இவர்கள் ஆர்.ஐ.,யிடம் சாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்தபோது, அவர் சான்றிதழுக்கு பரிந்துரைக்க மறுத்துவிட்டார். மாணவர் அஜித்குமார் கூறியதாவது : சாதி சான்றிதழ் இல்லாததால் அரசு வழங்கும் அரசு உதவித்தொகை பெற முடியவில்லை. எங்கள் ஊர் ஆர்.ஐ.,யிடம், சான்றிதழுக்காக விண்ணப்பித்தற்கு, தர மறுத்ததுடன், ''அப்படி ஒரு சாதியே இல்லை'' என்றும் ''ஆண்டிப்பண்டாரம் சாதியை சேர்ந்த நீங்கள் அன்னக்காவடி அல்லது தீச்சட்டி எடுத்து வாருங்கள், தருகிறேன்,'' என கேலி பேசுகிறார், என்றார். ராமநாதபுரம் தாசில்தார் சுந்தர்ராஜன் கூறும்போது, ''கலெக்டரிடம் மனு கொடுத்ததின் பேரில், புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ