உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் பட்டியல் திருத்தம்: களத்தில் மாஜி அரசு ஊழியர்

வாக்காளர் பட்டியல் திருத்தம்: களத்தில் மாஜி அரசு ஊழியர்

திண்டுக்கல்: சட்டசபை தேர்தலுக்கு பின், புது வாக்காளர் சேர்க்கையில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. பட்டியலில் பெயரை சேர்க்க விரும்புவோர், படிவம்-6; பெயர் நீக்க, படிவம்-7; திருத்தம் செய்ய, படிவம் -8; வேறு பகுதிக்கு மாற்ற படிவம்-8 ஏ மூலம் விண்ணப்பிக்கலாம். ஆர்.டி.ஓ., தாசில்தார், நகராட்சி கமிஷனரிடம் விண்ணப்பங்களை தரலாம். இவை குறித்து விசாரிக்க, அரசு ஊழியர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில், ஓய்வு பெற்ற ஊழியர்களை நியமிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் கட்சி சாராதவர்களாக இருக்கவேண்டும். தொடர் ந்து விண்ணப்பங்களை பெற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விண்ணப்பங்களை தேவையான அளவு அச்சிட்டு வழங்கவும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை