ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அ.தி.மு.க., அதிகாரப்பூர்வ இணையதளத்தில், எந்த தகவலும் வெளியிடப்படாதது, கட்சி தொண்டர்களிடம், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.ஜெயலலிதாவின் திடீர் மறைவு, தமிழகம் முழுவதும், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.,வினர் மட்டுமின்றி, ஜெயலலிதா வை கடுமையாக எதிர்த்து வந்த, தி.மு.க., வினரும், அவரது மறைவுக்கு இரங்கல் தெரி வித்து வருகின்றனர்.சோகம் :
சமூக வலைதளங்களில், 'நீ ஆளக்கூடாது என்று தான் நினைத்தோம். நீ வாழக்கூடாது என்று நினைத்ததில்லை... எங்கள் தலைவனை அனைத்தி லும் முந்த நினைத்த நீ,
இறப்பிலும் முந்தி விட் டாயே...' என, தி.மு.க.,வினர் வெளியிட்ட
கருத்துக் கள், அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால், அ.தி.மு.க., சார்பில்,ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டும் வகையில், அதிக கருத்துக்கள் வெளியிடப்படவில்லை. அதே போல், அனைத்து ஊடகங்களும், ஜெ., மறைவை ஒட்டி, அவரது சாதனைகளை பட்டிய லிட்டன. ஆனால், அ.தி.மு.க., வின் அதிகாரபூர்வ இணைய தளத்தில், ஜெ., மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, எந்த தகவலும் இடம் பெறவில்லை.வழக்கம் போல், சமீபத்திய செய்திகளாக, ஜெ., மறைவு குறித்து, அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட, அதிகாரபூர்வ அறிவிப்பு அறிக்கை; அவரது மறைவையொட்டி, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்து, அரசு வெளி யிட்ட அரசாணை போன்றவை மட்டும் வெளியிடப்பட்டு உள்ளன.ஜெ.,மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, இணைய தளத்தில் எந்த வித மாற்றங்களும் செய்யப்படாதது, அ.தி.மு.க., வினரிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏமாற்றம் :
இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறிய தாவது: அனைத்து கட்சிகளுக்கும் முன் மாதிரி யாக, தகவல் தொழில்நுட்ப பிரிவை, அ.தி.மு .க.,வில் துவக்கியவர் ஜெயலலிதா. வருங் காலத்தில், சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்தே,இந்த பிரிவை துவக்கினார். ஆனால், அந்த பிரிவில் இருப்போர்,எந்த பணியும் செய்யாமல் இருப் பது, ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.