உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வூதியதாரர் மருத்துவ சிகிச்சைக்கு புதிய மருத்துவமனைகள் சேர்ப்பு

ஓய்வூதியதாரர் மருத்துவ சிகிச்சைக்கு புதிய மருத்துவமனைகள் சேர்ப்பு

சென்னை : அரசு ஓய்வூதியதாரர் மருத்துவ நலத் திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்க, புதிதாக ஏழு மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழக அரசு ஓய்வூதியதாரர் மருத்துவ நலத் திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட சிறப்புத் தன்மை வாய்ந்த அறுவை சிகிச்சை, சிகிச்சைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. இப்பட்டியலில், மேலும் சில மரத்துவமனைகளைச் சேர்க்க, மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் ஆகியோர் அரசுக்குப் பரிந்துரைத்திருந்தனர்.

இதன்படி, சென்னை கீழ்ப்பாக்கம் தீபம் கண் மருத்துவமனை, மதுரையில் உள்ள வாசன் கண் மருத்துவமனை, கரூரில் ஆர்த்தி கண் மருத்துவமனை, தேனியில் கிருஷ்ணம்மாள் நினைவு மருத்துவமனை, மதுரையில் ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை, கோவையில் என்.எம்.மருத்துவமனை மற்றும் சைலோம் தாமஸ் கண் மருத்துவமனை ஆகிய ஏழு மருத்துவமனைகளுக்கு, இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிப்பதற்கு அங்கீகராம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ