உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீவிர சிகிச்சை பிரிவில் அண்ணாதுரை உறவினர் அனுமதி

தீவிர சிகிச்சை பிரிவில் அண்ணாதுரை உறவினர் அனுமதி

சென்னை: முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் வளர்ப்பு மகன் சகோதரர், மயிலாப்பூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் வளர்ப்பு மகன் பரிமளம். இவரின் சகோதரர் இளங்கோவன். இவர் காஞ்சி பத்திரிகையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு எலும்பு மற்றும் தோல்நோய் இருந்தது. கடந்த மார்ச் மாதம் கீழே விழுந்ததை தொடர்ந்து, அவருக்கு தொடையில் அறுவை சிகிச்சை செய்து பிளேட் பொருத்தப்பட்டது. இதையடுத்து, சகஜ நிலைக்கு திரும்பினார். இந்நிலையில், அவருக்கு ஏற்பட்ட மருத்துவ ஒவ்வாமை காரணமாக, கடந்த மாதம் மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து, 'பிளேட்' அகற்றப்பட்டது. இதில், அவர் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து, இளங்கோவனின் மனைவி விஜயா இளங்கோவன் கூறுகையில், 'மருத்துவ ஒவ்வாமை காரணமாக, என் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடையில் பொருத்தப்பட்ட, 'பிளேட்' அகற்றப்பட்டது. 'இதையடுத்து, அவரின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக, அவர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். இது குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் சார்பில் உதவிகள் கிடைத்தன. தற்போதும் என் கணவர் தீவிர சிகிச்சை பிரிவில் தான் சிகிச்சை பெற்று வருகிறார்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை