| ADDED : ஆக 16, 2011 11:17 PM
புதுடில்லி: வலுவான லோக்பால்மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரேவை டில்லி போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். சிறையில் உண்ணாவிரதம் இருக்க தொடங்கிய ஹசாரேவை விடுவிக்க வலியுறுத்தி நாடுமுழுவதும் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ராகுல் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து அன்னா ஹசாரேவை விடுவிக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்துஅவர் விடுதலைசெய்யப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்து திகார் ஜெயில் வாசலில் காத்திருந்த நிலையில் விடுதலையாக முடியாது என ஹசாரே மறுத்துவிட்டார். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விரிவான ஆலோசனை நடத்தினர் ஆலோசனையின் முடிவில் ஹசாரே உண்ணாவிரதம் இருக்கு மூன்று நாட்கள் அனுமதிப்பது என்றும், அப்படி ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் சொந்த கிராமத்திற்கு திருப்பி அனுப்புவது என்றும் போலீஸ் தரப்பில் முடி வு செய்யப்பட்டு அன்னாஹசாரேவிம் கூறப்பட்டது. போலீசாரின் இந்த நிபந்தனைகளை ஏற் ஹசாரே மறுப்பு தெரிவித்து தொடர்ந்து அவர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.