உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எரிசக்தி தினத்தை முன்னிட்டுபள்ளியில் போட்டி நடத்த உத்தரவு

எரிசக்தி தினத்தை முன்னிட்டுபள்ளியில் போட்டி நடத்த உத்தரவு

சிவகங்கை:இன்று ஆக.,20. முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் மரபுசாரா எரிசக்தி தினமாக கொண்டாடப்படுகிறது. எரிசக்தியின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில், போட்டிகளை நடத்தி, பரிசுகள் வழங்க, கல்வித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, அந்தந்த மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகளை நடத்தி பரிசு வழங்க உத்தரவிட்டுள்ளது. பள்ளி அளவில் நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு 100; 2ம் பரிசு 75 ரூபாய் தரவேண்டும். மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தி அதில் முதல் பரிசு 500; 2ம் பரிசு 300 ரூபாய் வழங்கப்படவேண்டும். மாவட்டங்களில் வெற்றி பெறும் மாணவர்களை மாநில போட்டிகளில் பங்கேற்க செய்யவேண்டும். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு 5,000; 2ம் பரிசு 3,000; 3ம் பரிசு 2,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி