உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலியல் பலாத்கார வழக்கு: ஐகோர்ட்டில் மாணவி மனு

பாலியல் பலாத்கார வழக்கு: ஐகோர்ட்டில் மாணவி மனு

மதுரை :திருச்சியில் இன்ஸ்பெக்டர் கண்ணன் பாலியல் பலாத்காரம் செய்ததாக தாக்கலான வழக்கில், மருத்துவ சோதனைக்கு அனுப்பும் உத்தரவை திரும்ப பெறக் கோரி மாணவி, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி ஒருவரை இன்ஸ்பெக்டர் கண்ணன், கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் வெளியானது. கண்ணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் மாணவிக்கு நஷ்டஈடு வழங்க கோரி, ஐகோர்ட் கிளையில் வக்கீல் ஒருவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி, வக்கீல் அருள்வடிவேல்சேகர் மூலம் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:கடத்தல் சம்பவத்தின் போது நடந்த விவரங்கள் குறித்து மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ளேன். மேலும் நான் பாலியல் கொடுமைக்கு ஆளாகவில்லை. இந்நிலையில் என் கருத்தை கேட்காமல், ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை தாக்கல் செய்ய என்னிடம் யாரும் அனுமதி பெறவில்லை. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், மருத்துவ சோதனைக்கு உத்தரவிட்டது. அதை திரும்ப பெற வேண்டும். மருத்துவ சோதனைக்கு செல்ல விருப்பம் இல்லை. விசாரணையின் போது, என்னை ஒரு தரப்பாக சேர்த்து விசாரிக்க வேண்டும், என கோரியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை